மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட இலக்கு வைத்து செயல்படும் பிரதமர் மோடி

by Staff / 15-04-2022 04:35:01pm
மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட இலக்கு வைத்து செயல்படும் பிரதமர் மோடி

மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரிகளை கட்ட இலக்கு வைத்துள்ளதால் இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் சாதனை அளவிலான எண்ணிக்கையில் புதிய மருத்துவர்கள் இருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் படேல் சமுதாய சங்கத்தால் கட்டப்பட்டுள்ள 200 படுக்கை வசதி கொண்ட உயர் சிறப்பு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி காணொளியில் திறந்து வைத்துள்ளார் நிகழ்ச்சியில் காணொளியில் உரையாற்றிய பிரதமர் மோடி 2001 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் தலைவிதி உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி எழுதப்படும். 200 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனை குறைந்த செலவில் மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகளை வழங்கும் என குறிப்பிட்டார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் முப்பத்தி ஆறு மருத்துவக் கல்லூரிகளும் 6000 மருத்துவப் படிப்பு இடங்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைவரும் மருத்துவ கல்வி கிடைக்கச் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி கட்ட இலக்கு வைத்துள்ளதாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சாதனை அளவிலான எண்ணிக்கையில் புதிய மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார். சிறந்த மருத்துவ வசதியை நோய்க்கான சிகிச்சை மட்டுமல்லாமல் சமூகநீதி மேம்பாட்டின் அடையாளம் ஆகும் என தெரிவித்தார். ஏழைகளுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைக்கும் போது அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via