பயணியர் வாகன விற்பனை 45 சதவீதம் அதிகரிப்பு

ஜூலை மாதத்தில், பயணி யர் வாகன மொத்தவிற் பனை 45 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மோட் டார் வாகனதயாரிப்பா ளர்கள் கூட்டமைப்பான, 'சியாம்' தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 1.83 லட்சம் பயணியர் வாக னங்கள்விற்பனை செய் யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு ஜூலையில், 2.64 லட்சம்வாகனங்கள் விற் பனை செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஸ்கூட் டர் விற்பனை10 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், மூன்று சக்கர வாகனவிற் பனை 41 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இரு சக்கர வாகன விற்பனை6 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தத்தில் இரு சக்கர வாகனவிற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது . அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து , மொத்த வாகன விற்பனை , கடந்த ஆண்டு ஜூலையில் 14.77 லட்ச மாக இருந்தது , நடப்பு ஆண்டு ஜூலையில் 15.36 லட்சமாக அதிகரித்துள்ளது என சியாம் தெரிவித்துள்ளது .
Tags :