சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு...

by Admin / 14-08-2021 03:20:35pm
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு...

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட  உள்ளது. இதை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் போலீசாரின்  பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

செண்ட்ரல் ரயில் நிலையம் , கலைவாணர் அரங்கம் , தலைமை செயலகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை காந்தி சிலை அருகே  நேற்றிரவு  போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்க்கு இடமான வகையில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதுடன் அவர்களின் முகவரிகளை பதிவு செய்த பின்னரே அனுப்பி வைத்தனர். முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது

.இதேபோல் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதனிடையே, 75ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையம் முழுவதும் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

 

Tags :

Share via

More stories