திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 91% கூடுதலாக பெய்துள்ளது.

by Editor / 14-12-2024 03:25:05pm
திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 91% கூடுதலாக பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் அக்.1 முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை 37% கூடுதலாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை 16% மட்டுமே கூடுதலாக பெய்திருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 37% அதிக மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பை விட 91% கூடுதலாக பெய்துள்ளது. மேலும், சென்னையில் 30% கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது

 

Tags : திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 91% கூடுதலாக பெய்துள்ளது.

Share via