திக்.திக்..தென்காசி மாவட்ட திமுக பரப்பரப்புக்கள்..சென்னை நோக்கி புறப்பட்ட திமுகவினர்.

by Editor / 27-07-2023 10:11:43pm
திக்.திக்..தென்காசி மாவட்ட திமுக பரப்பரப்புக்கள்..சென்னை நோக்கி புறப்பட்ட திமுகவினர்.

 தென்காசி மாவட்ட திமுகவில் சுமார் 15 ஆண்டுகாலமாக பொறுப்பாளாராக இருந்த வழக்கறிஞர் சிவபத்மநாதன் தென்காசியில் நடந்த மகளிரணி ஆர்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சித்தலைவி தமிழ்செல்வியின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பேச்சுமூலம் தூக்கிவீசப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தில் திமுகவில் தொடர் கோஷ்டிபூசல் என்பது வலுவாக இருந்துவருகிறது.உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்னரும்,பின்னரூம்தான் இது வலுவடைந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத்தொகுதிகளில் 2 மாவட்ட செயலாளர்கள் பணியாற்றிவந்தனர்.அதில் வடக்குமாவட்டத்த்தில்  கடையநல்லூர்,வாசுதேவநல்லூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு செல்லத்துரையும்,சங்கரன்கோவில்,தென்காசி,ஆலங்குளம்,ஆகிய தொகுதிகளுக்கு சிவபத்மநாதனும் என பணியாற்றிவந்த நிலையில் இருவருமே கட்சியின் கட்டளைகளை ஏற்று உள்ளாட்சித்தேர்தலில் அனைத்துநகராட்சி,ஊராட்சி,பேரூராட்சிகளிலும் மாவட்ட ஊராட்சி உட்பட அனைத்து இடங்களிலும் திமுகவையே வெற்றிபெற வைத்தனர்.

இந்தநிலையில் தான் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் வந்த நிலையில்  தென்காசி மாவட்ட திமுகவில் கோஷ்டிபூசல் தலைதூக்கியது. செல்லத்துரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பாட்டார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார்.மாவட்டத்தின் எல்லைகளும் பிரிக்கப்பட்டன.சங்கரன்கோவில்,வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகள் வடக்குமாவட்டமாகவும்,தென்காசி,ஆலங்குளம்,கடையநல்லூர் ஆகிய 3 சட்டமன்றத்தொகுதிகள் தெற்குமாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டன.செல்லத்துரையை கட்சி மாவட்ட செயலாளர் பதிவியில் இருந்து தூக்கியத்தில் இருந்தும்,சிவபத்மநாதனை அறிவித்ததிலிருந்தும் தெற்குமாவட்டத்தில் மேலும் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கியது.வீடியோக்கள்,ஆடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை அதிகரித்தது.

 இதில் சிவபத்மநாதனால் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட வாய்யப்பு வழங்கப்பட்டு வெற்றிபெற்றவர்கள் பலர் சிவபத்மநாபனுக்கு எதிராக களமிறங்கினர்.எதிரணியினர் அனைவரும்  ஓன்று சேர்ந்து சிவபத்மநாதனுக்கு எதிராக களமிறங்கி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி எழுப்பிய குற்றசாட்டுத்தான் அதிரவைத்தது.மாவட்ட ஊராட்சித்தலைவியையும்,சட்டமன்றஉறுப்பினர் ராஜாவையும் அவர் குட்ட அரங்கில் வெளுத்துவங்கியதால் கட்சியில் கோஷ்டி வெட்ட வெளிச்சமாக தெரியத்தொடங்கியது. இந்த கூட்டத்தில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சிதான் தென்காசியில் நடந்த மணிப்பூர் சம்பவ ஆர்ப்பாட்டத்தில்  வெடித்தது.இதுதான் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பெரும்பரபரப்பை உருவாக்கவே தமிழ்செல்வியின் கூக்குரல் உடனடியாக பரபரப்பை உருவாக்கவே தலைமை தர்மசங்கடத்திற்கு ஆளாகிய நிலையில்தான்  சுரண்டை நகர திமுக செயலாளராக இருந்த ஜெயபாலன் என்பவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு நியமித்து அதனை துரைமுருகன் மூலம் அறிவிக்கவும் வைத்திருக்கிறார் கட்சியின் தலைவர் ஸ்டாலின். ஜெயபாலனை மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்ததன் பின்னணியில் கனிமொழி கருணாநிதியின் கை ஓங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுரண்டை நகரசெயலாளர் ஜெயபாலனை பொறுத்தவரை கனிமொழிகருணாநிதியின் யின் தீவிர ஆதரவாளராக செயல்படுபவர்.அவருக்காக கனிமொழி செய்த சிபாரிசை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதால் இந்த அதிரடி அறிவிப்பு.மேலும்  முதல்வர் ஸ்டாலின்.இதன் மூலம் இனி அடுத்தடுத்த மாற்றங்களும் தென்காசி மாவட்ட திமுகவில் அரங்கேறலாம் எனத் தெரிகிறது. இதனால் புகாருக்குள்ளான திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதனிடையே தென்காசி மாவட்ட திமுகவை பொறுத்தவரை முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் துரை, செல்லத்துரை, சிவபத்மநாதன், என மூன்று மாவட்டச் செயலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் தென்காசி மாவட்டத்தில் நிலவும் கடுமையான கோஷ்டிப்பூசல் தான்என்பது மறுக்கமுடியாத உண்மை.இந்தநிலையில் கசப்புக்களை கடந்த புதிய மாவட்ட செயலாளர் ஜெயபாலன் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை நேரில்சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் பெற்றார்.இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை சந்தித்து வாழ்த்துக்களைப்பெற்றபோது அனைவரையும் தலைவர் சென்னைக்கு வரஅழைப்புவிடுத்துள்ளதாக அவர் தெரிவித்ததாக்க கூறப்படுகிது.இதன் தொடர்ச்சியாக  இன்று தென்காசி மாவட்டத்திலிருந்து முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,மற்றும் புதிய மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையிலும் ,முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமையிலும் ஏராளமான நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.  

திக்.திக்..தென்காசி மாவட்ட திமுக பரப்பரப்புக்கள்..சென்னை நோக்கி புறப்பட்ட திமுகவினர்.
 

Tags : தென்காசி மாவட்ட திமுக பரப்பரப்புக்கள்

Share via