மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு

by Staff / 05-05-2022 02:12:04pm
மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி சென்ற விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு

கோவையில் மது குடித்துவிட்டு பேருந்து ஓட்டி விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காஞ்சிபுரத்திலிருந்து நாயக்கன்பாளையம் நோக்கி சென்ற பேருந்தை ஓட்டி ரகு  என்ற அந்த ஓட்டுநர் துடியலூர் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மது அருந்திவிட்டு பேருந்து ஓட்டி வந்ததை அறிந்தனர்  தகவல்  அறிந்து வந்த காவல்துறையினர் அரசு பேருந்தை பறிமுதல் செய்ததுடன் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo