ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை

by Editor / 09-07-2021 07:56:49pm
ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உள்ளாட்சி தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக தோல்வியடைந்தது என்று கூறிய கருத்தால் அதிமுக - பாஜக இடையே நிலவும் பனிப்போர் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 
முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் வந்த போது, 'ஒற்றைத் தலைமை' ஐயா ஓபிஎஸ் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.. இதே போல் இபிஎஸ் வருகை தந்த போதும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். மாறி மாறி இரு தரப்பினரும் ஒற்றை தலைமை என்று முழக்கம் எழுப்பியதால் அதிமுக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அல்லது தீர்மானங்கள் குறித்த விவரம் இனிமேல் தான் வெளியாகும்.

இரு தொண்டர்களும் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே சசிகலா தொண்டர்களுடன் அதிமுகவை காப்பாற்ற வருவேன் என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via