அகமதாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத்தின் அகமதாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக மின்னஞ்சல்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், விமானங்கள், ரயில் நிலையங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களாக குஜராத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதனிடையே இன்று உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :