சட்டவிரோதமாக கள் விற்பனை 2 -பேர் கைது- 10லிட்டர் கல் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதூர் பாண்டியாபுரம் பகுதியில் சட்ட விரோதமாக கள் விற்பனை செய்வதாக புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம் சாதாரண உடயில் அங்கு சென்ற போலீசார் கள் குடிப்பது போல் அங்கு சென்று அவர்களிடம் கள் கிடைக்குமா என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே கள் விற்பனை செய்த நபர் இரண்டு பேர் கள்ளை ஊற்றி போலீசாருக்கு கொடுத்தனர்.இதனைத்தொடர்ந்து கள் விறபனையை உறுதிப்படுத்திய போலீசார் அங்கு இருந்த இரண்டு நபர்களை மடக்கி பிடித்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10-லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்து கள் விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்த உச்சி மாகாளி (45)மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் (58) ஆகிய இருவரும் அந்த பகுதியில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட பனைகளில் மண் பானை கட்டி சட்டவிரோதமாக கள் விற்பனை ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதை எடுத்த புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கம் இருவரையும் கைது செய்து புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் மூன்று பிரிவின் கீழ் இருவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : சட்டவிரோதமாக கள் விற்பனை 2 -பேர் கைது-