இலத்தூர் சாலை விபத்தில் பெற்றோரை இழந்த 2ம் வகுப்பு மாணவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு

by Editor / 21-06-2024 11:04:31pm
இலத்தூர் சாலை விபத்தில் பெற்றோரை இழந்த 2ம் வகுப்பு மாணவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு

தென்காசி மாவட்டம் இலத்தூர் விலக்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2ம் வகுப்பு மாணவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ. 5 லட்சம் வைப்பீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேலும் சிறுவனின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 4000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுவனது நலன் கருதி மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் சிறுவன் முறையாக கல்வி பயில்வது உறுதி செய்யப்படும்.

 

Tags : இலத்தூர் சாலை விபத்தில்

Share via