அக். 8-ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி,அக்.9-ல் மதுரையில் உண்ணாவிரதம்.

by Editor / 02-10-2024 01:10:12pm
அக். 8-ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி,அக்.9-ல் மதுரையில் உண்ணாவிரதம்.

தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அக். 8-ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போராட்டம் நடைபெறவுள்ளது.

மேலும்  தமிழ்நாட்டில்  நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மதுரையில் அக்டோபர் 9ஆம் தேதி அதிமுக உண்ணாவிரதம்.முதலமைச்சரின் பயணங்களால் பெறப்பட்ட அன்னிய முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளார்..

 

Tags : அக். 8-ல் அதிமுக சார்பில் மனித சங்கிலி,அக்.9-ல் மதுரையில் உண்ணாவிரதம்.

Share via