ஜெயிலர் படம் அனைத்து தரமான மக்களையும் ஈர்க்கும் விதமாக உள்ளதால் வசூலை அள்ளுகிறது.

ரஜினியின் ஜெயிலர் படம் அமோகமான வரவேற்பை உலக அளவில் பெற்று வசூலில் சாதனை புரிந்து வருகிறது இரண்டு நாளில் கிட்டத்தட்ட 200 கோடியை நெருங்கக் கூடிய அளவிற்கு வசூலை வாரி குவித்து உள்ளது அமெரிக்காவில் மட்டும் ஒன்பது கோடியை மூன்று நாட்களில் பெற்றதாக வடக்குழுதே அறிவிக்கக்கூடிய நிலையில் பணம் வெற்றி பெற்றிருக்கிறது. ரஜினிகாந்த், மோகன்லால் சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்து அனிருத் இசையில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உலக அளவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்களில் திரையிடப்பட்டு வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது, ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், பீஸ்ட் படத்தை விட தமிழக அளவில் ரஜினியின் ஜெயிலர் படம் வசூலிக்கவில்லை என்றும் ஆனால் ,மற்ற மாநிலங்களில் உலக அளவில் அதிகமான வசூலை பெற்றிருப்பதாகவும் இரு ரசிகர்களுக்கு இடையேயான சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.மொ த்தத்தில் ஜெயிலர் படம் அனைத்து தரமான மக்களையும் ஈர்க்கும் விதமாக திரைக்கதையும் பாத்திர வாா்ப்புகளும் அமைந்துள்ளதால் படம் எதிர்பார்த்ததை விட அதிகமான ஒரு வெற்றியை பெறக்கூடிய சாத்திய கூறுகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

Tags :