கல்பனா சாவ்லா விருதுக்கு இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்

by Admin / 21-06-2022 11:30:33am
கல்பனா சாவ்லா விருதுக்கு இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்


துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் சுதந்திர தினவிழாவில் வழங்கப்படுகிறது.தமிழ் நாட்டைச்சேர்ந்த துணிச்சலான மற்றும் வீரசாகசச்செயல் புரிந்த ஒரு பெண் இவ்விருதினைப் பெற தகுதியுடையவராவர்.இயற்கை பேரழிவுகள்,விபத்துக்கள்,நீரில்  மூழ்கும் சம்பவங்கள் தீ தொடர்பான சம்பவங்கள்,திருட்டு மற்றும் துணிச்சலான முயற்சிகள் ஆகியவற்றின் போது பல தனிநபர்கள் நிகழ்த்திய பல்வேறு வீர சாகசச் சம்பவங்கள்  தொடர்பாக  இவ்விருது  வழங்கப்படுகிறது.  2022-ஆம்  ஆண்டிற்கான  "கல்பனா சாவ்லா விருது"  பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள்,விரிவான தன் விவரக்குறிப்பு உரிய விவரங்கள் மற்றும் தகுந்த ஆவணங்களுடன் ,சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https;//awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசு செயலாளர்,பொதுத்துறை,தலைமைச்செயலகம்,சென்னை-09  க்கு  30.06.2022க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் க.அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories