உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோவில் இன்று இரவு தொடங்குகிறது.
உலகக் கோப்பை 23-வது ஃபிஃபா கால்பந்து போட்டி மெக்சிகோவில் தொடங்குகிறது.
.இந்திய நேரப்படி இன்று இரவு 11:00 மணிக்கு மெக்சிகோ சிட்டி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.
முதல் போட்டி:
குரூப் 'ஏ' பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது
மெக்சிகோ சிட்டியில் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.
வழக்கமான 32 அணிகளுக்குப் பதிலாக, இந்த முறை 48 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை மொத்தம் 39 நாட்களுக்கு 104 போட்டிகள் 16 நகரங்களில் நடைபெறுகின்றன.
இறுதிப் போட்டி:
ஜூலை 19, 2026 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Tags :


















