தலை துண்டிக்கப்பட்டு ராணுவ வீரர் உயிரிழப்பு

by Staff / 13-03-2024 05:36:11pm
தலை துண்டிக்கப்பட்டு ராணுவ வீரர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து மதுரை நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயில் இன்று மதியம் கரூர் வந்தடைந்த நிலையில் ரயில் சிறிது நேரம் நின்றிருந்தது. அப்போது கீழே இறங்கி விட்டு மீண்டும் ரயிலில் ஏறும்போது பாஸ்கர் தடுமாறி கீழே விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கினார். விபத்தில் பாஸ்கர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்று பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories