இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட்!

by Editor / 15-06-2021 08:17:54am
இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட்!

நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒற்றை இடத்தை அதிகமாக பெற்று இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றுள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்து கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தற்போது நப்தாலி பென்னட் என்பவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் எதிரணிக் கூட்டணிக்கு 60 இடங்கள் கிடைத்துள்ளது.

ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து வெறும் ஒற்றை இடம் அதிகமாகப் பெற்று எதிர்க்கட்சியின் கூட்டணியால் தேர்வு செய்யப்பட்ட நப்தாலி என்பவர் தற்போது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பிரதமர் பொறுப்பை வகிக்கும் நேரத்தில், நப்தாலிக்கு எதிரணியின் தலைவரான யாயீர் லப்பீடுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் அல்லது பெஞ்சமின் நெதன்யாகு அணியுடன் ஒன்று சேர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு நப்தாலி யாயீருடன் சேர்ந்து பிரதமர் பொறுப்பை வகிக்கும் வாய்ப்பை தேர்வு செய்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட்!
 

Tags :

Share via
Logo