நாயிடமிருந்து சிறுமியைக் காப்பாற்றிய தாத்தா

by Staff / 26-03-2023 12:33:50pm
நாயிடமிருந்து சிறுமியைக் காப்பாற்றிய தாத்தா

சிறுவர்களை தெரு நாய்கள் தாக்கும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஒன்றரை வயது சிறுமியை நாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் நின்றிருந்த சிறுமியை நாய் ஒன்று பிடிக்க முயன்றது. அப்போது அருகிலிருந்த சிறுமியின் தாத்தா வந்து நாயை விரட்டினார். பீட்டா 1 செக்டரில் உள்ள c-பிளாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories