ஆண்மையும் ஆளுமையும் உள்ள ஆளுநர் - ஹெச்.ராஜா ட்வீட் 

by Editor / 30-06-2023 09:13:13am
ஆண்மையும் ஆளுமையும் உள்ள ஆளுநர் - ஹெச்.ராஜா ட்வீட்  தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நேற்றிரவு ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து முதலமைச்சரின் எதிர்ப்பை தொடர்ந்து, அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது பற்றி ட்வீட் செய்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, 'ஆளுநர் தனி அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்று ஏற்கனவே மு.கருணாநிதி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆண்மையும் ஆளுமையும் உள்ள ஆளுநர் தமிழக அரசியலை தூய்மை படுத்த எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது. அரசியல்சட்ட ஞானம் இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்' என காட்டமாக தெரிவித்துள்ளார்.
 

Tags :

Share via

More stories