டெங்கு பாதிப்பால் 4 வயது சிறுவன் பலி

by Staff / 10-09-2023 02:54:18pm
டெங்கு பாதிப்பால் 4 வயது சிறுவன் பலி

சென்னை மதுரவாயலை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்ததில், அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி எழும்பூர் குழந்தைகள் மருத்துவனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

 

Tags :

Share via