தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

by Staff / 13-08-2023 04:50:55pm
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

     தென்காசி மாவட்ட  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்   மா .சுப்பிரமணியன் சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டடங்கள் திறந்து வைக்க வருகை புரிந்தார்.அவரை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் , உறைவிட மருத்துவர் செல்வ பாலா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்.   
     தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 20 வருடங்களுக்கும் மேலாக கண் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. 
         தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து  பொதுமக்களும் கண் அறுவை சிகிச்சைக்காக, தென்காசி அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்  கடந்த ஓராண்டில் 2022-2023 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் அதிக கண் புரை அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளில், தென்காசி, அரசு மருத்துவமனை மாநில அளவில் 5வது இடத்தில் உள்ளது என தமிழக அரசால் பாராட்ட பெற்றுள்ளது

          இங்கு ஒவ்வொரு மாதமும்   ஏறத்தாழ 100க்கும் மேல் கண் அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டு  வருகிறது   2022 ஜூன் - 2023 ஜூலை வரையிலான அறுவைசிகிச்சையின் எண்ணிக்கை - 1550            கண்நீர்ப்பை  சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் ,கண்  இமை                                                                                                    சீர்திருத்தம்  ஆகியவையும் நடைபெற்றுவருகிறது                     
                  இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு  சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களால் ரூபாய் 60 லட்சம் நிதியில் கூடுதல் கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பகுதி  தொடங்கப்பட்டுள்ளது. 
                  தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக SONIC (ULTRA  SONIC ) மூலம் செய்யப்படும் PHACO   EMULSIFICATION எனும் நுண்துளை புரை அறுவை சிகிச்சை வசதிவசதி சுமார் 12 இலட்சம் செலவில்  இந்த கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
                      கண்  நோயாளிகளுக்கு விழித்திரையில் ஏற்பட்டும் ரத்த கசிவினால், குறுகிய காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் பார்வையிழப்பை தடுப்பதற்கான லேசர் தெரபி செய்யும் கிரீன் லேசர் என்ற கருவி சுமார் 15 இலட்சம் செலவில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி வழங்கப்பட்டுள்ளது.இதனால் விழித்திரையில் ஏற்படும் ரத்தக்கசிவினால்  உண்டாகும் பார்வையிழப்பை 100 % குணப்படுத்தமுடியும்  
                   இவ்விழாவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஹோமியோபதி மருத்துவ பிரிவு கட்டிடம்  ரூபாய் 15 இலட்சம் மதிப்பில்  கட்டப்பட்டு   இதன் மூலம் பொதுமக்களின் நன்மைக்காக திறக்கப்பட்டுள்ளது.
           நேற்று சென்னையில் நடைபெற்ற தேசிய தர உறுதி நிர்ணய திட்ட (NQAS) விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு தமிழக முதலமைசார் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில்  சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்ரமணியன்  கரங்களால், தென்காசி அரசு மாவட்ட தலைமை  மருத்துவமனைக்கு  தேசிய தர சான்று மற்றும் LaQshya சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
                           விழாவில் முத்தாய்ப்பாக, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் சேவைகளையும்,பணியாளர்களையும் பெரிதும் பாராட்டினார். நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய அரசினால் வழங்கப்பட்ட தேசிய தரச்சான்றிதழ் மற்றும் மகப்பேறு பிரிவு தரச்சான்றிதழ்களை, தென்காசி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  அனைத்து பணியாளர்களையும்  பாராட்டி சான்றிதழுடன்  குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். 
     தென்காசி மாவட்ட இணை இயக்குநர் மருத்துவர்  பிரேமா லதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின்,மருத்துவர் கிருஷ்ணன் ,உறைவிட  மருத்துவர் செல்வபாலா, 
மருத்துவர் கீதா, மருத்துவர்  ராஜேஷ் ,மருத்துவர் புனிதவதி,மருத்துவர் லதா மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் பத்மாவதி,ராஜாதிஜெகதா ,முத்துலட்சுமி,வசந்தி,திரு திருப்பதி ஆகியோர்கள் மற்றும் அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via