ஜார்க்கண்ட் தேர்தல்: காங்கிரஸ் 31 இடங்களில் போட்டி
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சு நிறைவுப் பெற்றது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 44 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஆர்ஜேடி 6 இடங்களிலும் போட்டியிட உள்ளனர். தேர்தலில் போட்டியிட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் இடதுசாரி கட்சிகள் அதிருப்தியில் உள்ளனர். 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட்டில் 2 கட்டங்களாக நவ. 13, 20ல் தேர்தல் நடைபெற உள்ளது.
Tags :