குட்டையில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியில் அருள்குமார் (33) என்பவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. நேற்று அருள்குமார் வழக்கம்போல் பண்ணைக்கு வேலைக்கு வந்தார். அங்கு விவசாய பணிகளை முடித்து விட்டு கை கழுவுவதற்காக சின்னஆறுவ செட்டியார் தோட்டத்தில் உள்ள பண்ணைக்குட்டைக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அவர் குட்டையில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி அருள்குமாரின் சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















