புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரனுக்கு என்சிபி சம்மன்

by Staff / 11-04-2024 12:22:00pm
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரனுக்கு என்சிபி சம்மன்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி பிரமுகர் ராஜேந்திரனுக்கு தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் மாஃபியா ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து விளக்கம் அளிக்க புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரனுக்கு என்சிபி சம்மன் அனுப்பியுள்ளது. ஈரம் அறக்கட்டளை நிறுவனரான ராஜேந்திரன் வரும் 14, 15ஆம் தேதிகளில் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதே வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவருடனான தொடர்பு குறித்து, இயக்குநர் அமீரிடமும் இது பற்றி சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

 

Tags :

Share via

More stories