தை பிறந்தால் வழி பிறக்கும்- பொங்கலுக்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் -பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்ட பாசாரில் நடந்தது. இந்நிகழ்வில் கூட்டணி குறித்த இறுதி முடிவை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பதாக பல மாதத்திற்கு முன்னாலே சொல்லி வந்தார்..ஆனால், இந்த மாநாட்டில் எந்த கட்சியோடு கூட்டணி என்பது குறித்த முடிவை அறிவிக்கவில்லை. கூட்டணி குறித்து மாவட்ட செயலாளருடன் ஆலோசித்து ஏற்கனவே ஒரு முடிவெடுத்து விட்டதாகவும் அதை அறிவிக்க இது சரியான நேரம் அல்ல.ஆளுங்கட்சியும் அல்லது பிற முக்கிய கட்சிகளோ இன்னும் தங்களது கூட்டணி அறிவிக்காத நிலையில், தே.மு.தி.க மற்றும் அவசரப்பட்டு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.கவை மதிக்கும் - கௌரவிக்கும் கட்சியுடனே கூட்டணி அமைக்கப்படும் . அந்தக் கூட்டணி 2026 தேர்தல் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் உறுதிப்படக் கூறினார். தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் குறிப்பிட்ட அவர் பொங்கலுக்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றதோடு தேமுதிக இல்லாமல் யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் வரும் தேர்தலில் தேமுதிக இடம் பெறும் கூட்டணியை வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்..
Tags :


















