2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

by Staff / 07-03-2025 12:39:56pm
2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். 28 மாவட்டங்களின் ஊராட்சிகளுக்கு வழக்கமான தேர்தல்கள் நடத்தப்படும் வரை ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிக்க, அரசுக்கு அதிகாரம் அளிக்க, சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது.

 

Tags :

Share via