பெண் போலீசை தகாத வார்த்தையால் பேசிய ஆட்டோ டிரைவர்

by Editor / 19-12-2022 08:50:05am
பெண் போலீசை தகாத வார்த்தையால் பேசிய ஆட்டோ டிரைவர்

நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து வடீவீஸ்வரம் செல்லும் சாலை ஒருவழிப்பாதை என்பதால் , அங்கு வாகனங்கள் வடீவீஸ்வரம் நோக்கி செல்ல பட்டுள்ளது. நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்று வருபவர் அனிதா குமாரி. இவர் இரவு கட்டபொம்மன் சந்திப்பு பகுதியில் பணி தடை செய்யப்யில் இருந்தார். அப்போது ஒருவழிப்பாதை வழியாக செல்ல முயன்ற ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி திரும்பி செல்லும்படி கூறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் , அனிதாகுமாரியை தகாத வார்த்தையால் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்தார். இதுகுறித்து அனிதாகுமாரி கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் , ஆட்டோ டிரைவர் வடசேரி மேட்டு
தெருவை சேர்ந்த ஜெகன் ( வயது 45 ) என்பதும் , மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இதற்கடையே பெண் போலீசிடம் ஆட்டோ டிரைவர் ரகளையில் ஈடுபட்ட காட்சி தற்போது சமூகவலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo