திமுகவுக்கு சீமான் திடீர் ஆதரவு

by Staff / 03-09-2023 04:04:30pm
திமுகவுக்கு சீமான் திடீர் ஆதரவு

ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு தருவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக களமிறங்கினால் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். காங்கிரசை கூட்டணியில் இருந்து நீக்கினால் திமுகவுக்கு ஆதரவு தருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo