பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

by Staff / 03-09-2023 04:00:52pm
பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

வாணியம்பாடியில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நியூடவுன் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நபர் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் . இதனால் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் 5 நாட்களுக்கு அணைத்து கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. பண்ணையில் ஒரு பன்றிக்கு இந்த பாதிப்பு வந்தாலும் பரவலை கவனித்து தடுக்காவிட்டால் விரைவில் அனைத்து பன்றிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo