அமைச்சர் உதயநிதிக்கு அமித் ஷா கண்டனம்

by Staff / 03-09-2023 04:06:44pm
அமைச்சர் உதயநிதிக்கு அமித் ஷா கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் உள்ள பெனேஷ்வர் தாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''கடந்த இரண்டு நாட்களாக இந்தியா கூட்டணி சனாதன தர்மத்தை அவமதித்து வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகின்றனர். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

 

Tags :

Share via