தடைகளை தாண்டி ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி

by Editor / 07-10-2021 10:30:40am
தடைகளை தாண்டி ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி

உபி.,யில் வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக லக்னோ விமான நிலையம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின் லகிம்பூர் புறப்பட்ட ராகுல்காந்தி, அங்கு காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட தனது சகோதரி ப்ரியங்கா காந்தியையும் அழைத்துக்கொண்டு லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பலியா தாலுகாவை சேர்ந்த லவ்ப்ரீத்சிங் என்ற விவசாயி வீட்டிற்குச் சென்றனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாரை சந்தித்து ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்த வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ராமன் காஷ்யப் வீட்டிற்குச் சென்றனர். நிகேசன் தாலுகாவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ராகுல்-ப்ரியங்கா இருவரும், அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அங்கு அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்காகாந்தியின் வருகை காரணமாக லகிம்பூர் கேரி மாவட்டம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும் காங்கிரஸார் பலரும் அவர்களுடன் அரணாக உடன் சென்றனர்.

 

Tags :

Share via