10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் : எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் : எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் இடங்கள், எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.
Tags :