ஒண்டிவீரன்‌ நினைவிடத்தில்‌ தென்காசி ஆட்சியர் மலரஞ்சலி

by Editor / 20-08-2021 06:07:26pm
ஒண்டிவீரன்‌ நினைவிடத்தில்‌ தென்காசி  ஆட்சியர் மலரஞ்சலி

 தென்காசி மாவட்டம்‌, சிவகிரி வட்டம்‌, நெல்கட்டும்‌ செவல்‌ பச்சேரி பகுதியில்‌ விடுதலைப்‌ போராட்ட வீரர்‌ மாவீரன்‌ ஒண்டிவீரன்‌ நினைவிடத்தில்‌ மாவட்டஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ்‌ மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்‌.
விடுதலைப்‌ போராட்ட தியாகிகள்‌ மற்றும்‌ தலைவர்களை நினைவு கூறும்‌ விதமாக தமிழக அரசின்‌ சார்பில்‌ அவர்களது பிறந்தநாள்‌ மற்றும்‌ நினைவு நாட்களில்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்‌ தொடர்ச்சியாக, தென்காசி மாவட்டத்திலுள்ள விடுதலைப்‌ போராட்ட வீரர்‌ மாவீரன்‌ ஒண்டிவீரன்‌ 250 வது நினைவு நாளில்‌, அவரது புகழை கொண்டாடும்‌ விதமாக அவரது நினைவிடத்தில்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும்‌ நோக்கில்‌ ஊரடங்கு உத்தரவு அமலில்‌ இருப்பதால்‌ பொதுமக்கள்‌ அதிகமாக கூடாத வகையில்‌ தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

Tags :

Share via

More stories