அமொிக்க டெக்சாசில் தொழிற்சாலை தீ விபத்து

by Admin / 24-03-2026 09:24:54am
அமொிக்க டெக்சாசில் தொழிற்சாலை தீ விபத்து

அமெரிக்க மாகாணம் டெக்சாஸில் போர்ட் ஆர்டர் நகரில் உள்ள எண்ணெய் சுத்தகையிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. திங்கட்கிழமை மாலை 6:30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது ஒரு தொழில் துறை ஹீட்டர் வெடித்தது இந்த விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அருகில் இருந்த வீடுகளை உலுக்கியதுடன் வானத்தை நோக்கி கரும்புவைகளும் கடுமையான சத்தமும் ஏற்பட்டன. இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பு அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் மற்றும் வலேரோ நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது .ஆலையில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. நச்சுப் புகை மற்றும் காற்றில் பரவிய கந்தகம் போன்ற நச்சு வாய்வினால் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். குறிப்பாக சபின் பாஸ் மற்றும் பிளசர் ஐலேண்ட் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளின் காரணமாக அருகில் உள்ள இரண்டு நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை கட்டு கொண்டு வந்தனர்..

 

Tags :

Share via