ரசாயன கலப்பு: நீல நிறத்திற்கு மாறிய வாத்துகள்

by Editor / 19-05-2025 01:32:01pm
ரசாயன கலப்பு: நீல நிறத்திற்கு மாறிய வாத்துகள்

பிரேசில் நாட்டில் உள்ள சா பாலோ நகரத்தில் உள்ள ஆற்றில் தவறுதலாக கலந்த நீல நிற ரசாயனத்தால், வெள்ளை நிறத்தில் இருந்த வாத்துகள் முழுவதும் நீல நிறத்திற்கு மாறியுள்ளன. ரசாயனத்தை ஏற்றி வந்த லாரி ஒன்று கம்பத்தில் மோதி ஆற்றுக்குள் விழுந்ததால், இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் நிறம் மாறிய வாத்துகளை மீட்டு, சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

Tags :

Share via