உக்ரைன் அதிபரை சந்தித்த மோடி

by Staff / 20-05-2023 05:23:20pm
உக்ரைன் அதிபரை சந்தித்த மோடி

ஜப்பான் ஹிரோஷிமாவில் நடந்து வரும் ஜி 7 உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஜப்பான் சென்றார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியதிலிருந்து முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்தும், ஐநா தீர்மானங்களுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கும் இந்தியா குறித்தும், ரஷ்யாவில் இருந்து வரும் எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் ஜி 7 மாநாட்டில் கலந்துரையாடல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories