உலகின் மிக உயரமான பாலத்தில் முதல் ரயில் சோதனை ஓட்டம்

by Staff / 17-06-2024 11:24:37am
உலகின் மிக உயரமான பாலத்தில் முதல் ரயில் சோதனை ஓட்டம்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தில் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோவை ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்த பாலத்தின் வழியாக ரம்பான் முதல் ரியாசி வரை விரைவில் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. 1,315 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், செனாப் ஆற்றின் மீது 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

 

Tags :

Share via