முந்திரிப்பருப்பு பர்பி செய்வது எப்படி?

by Admin / 02-08-2021 11:29:48pm
முந்திரிப்பருப்பு பர்பி செய்வது எப்படி?

 

தேவை

முந்திரிப்பருப்பு – 1 கப்

சீனி – 3 கப்

நெய் – 2 கப்

மைதா மாவு – 1 கப்

தண்ணீர் – 1/4 கப்

 

 

செய்முறை

        முந்திரிப்பருப்பை லேசாக வெறுஞ்சட்டியில் சூடாக்கி பொடி பண்ணவும். தண்ணீரில் சீனி, முந்திரிப்பருப்பு மாவு போட்டு கொதிக்க விடவும். கொதித்த பின் மைதாவை சிறிது சிறிதாக தூவி கட்டிவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டும்போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும். பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.

 

 

Tags :

Share via