கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயி

by Staff / 12-09-2022 02:45:15pm
கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்கச் சென்று மரணம் அடைந்த விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள கல்லு குட்டப்பட்டியை
சேர்ந்தவர் சின்னசாமி. இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் இவருடைய  50 அடி ஆழ
கிணற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மலைப்பாம்பு விழுந்ததைப் பார்த்துள்ளார். 

அந்த மலைப்பாம்பை  கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக சின்னசாமியின் நிலத்தில் வேலை செய்யும் பனகமுட்லு கிராமத்தை சேர்ந்த முதியவர் நடராஜ் என்பவர் கிணற்றில் இறங்கியுள்ளார்.

கிணற்றில் இருந்த மலைபாம்பைக் பிடித்து விட்டு வெளியில் வரும்பொழுது திடீரென மலைப்பாம்பு முதியவர் நடராஜின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் சுற்றிக்கொண்டது இதனை அடுத்து நிலைதடுமாறி முதியவர் நடராஜ் மீண்டும்கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

அப்போது நடராஜ் உடலில் மலை பாம்பு சுற்றிகொண்டதால் நீச்சல் அடிக்க முடியாமல் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த முதியவர் நடராஜின் உடலை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவேரிப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via