கனமழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .
தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்து, வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கனமழை காரணமாக நாளை (டிச.2) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக நாளை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags : கனமழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை .