3000 தாண்டிய உயிரிழப்பு

by Staff / 11-10-2023 12:59:25pm
3000 தாண்டிய உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஐந்தாவது நாளாக உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பிலும் இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது இஸ்ரேல் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காசாவில் ஏராளமான கட்டிடங்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்படுகின்றன. காசாவில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories