நாளை முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்  மத்திய அரசு முக்கிய முடிவு..?

by Editor / 30-01-2024 04:50:07pm
நாளை முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்  மத்திய அரசு முக்கிய முடிவு..?

நாளை 2024 ஆம் ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.பீகாரில் ஆட்சி மாற்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுக்க முனைப்பு கட்டிவருகின்றது.

இந்த நிலையில் மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகவும் அதனை பட்ஜெட் கூட்ட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குழப்பம் ஏற்படுத்தியதாக 135 உறுப்பினர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். மேலும், ராஜ்யசபாவில் 11 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், புதன்கிழமை முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் ராஜ்யசபாவில் இடைநீக்கம் செய்யப்பட்ட 11 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : நாளை முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்  மத்திய அரசு முக்கிய முடிவு..?

Share via