அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர்செந்தில் பாலாஜி சார்பில், 2வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் திருத்தம் செய்து அமலாக்கத்துறையினர் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார். முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நாளை வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நீட்டித்திருக்கிறார்.
Tags : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு