தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

by Staff / 09-11-2023 12:11:51pm
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories