எப்படி ஊழல் செய்வது அல்லது எப்படி கொள்ளை அடிப்பது என்பதற்கு டாக்டர் பட்டம் வழங்கலாம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து பேசினார்

by Admin / 20-04-2026 01:36:43am
எப்படி ஊழல் செய்வது அல்லது எப்படி கொள்ளை அடிப்பது என்பதற்கு டாக்டர் பட்டம் வழங்கலாம்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து பேசினார்

கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து பேசினார் .ஊழல் செய்வதிலும் தில்லுமுல்லு செய்வதிலும் செந்தில் பாலாஜி கைதேர்ந்தவர் என்றும் அவருக்கு எப்படி ஊழல் செய்வது அல்லது எப்படி கொள்ளை அடிப்பது என்பதற்கு டாக்டர் பட்டம் வழங்கலாம் என்றும் கடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி 100 ரூபாய் மதிப்பிலான கொலுசுக்களை வாக்காளருக்கு வழங்கி வெற்றி பெற்றதாக கூறி கூட்டத்தில் ஒரு கொலுசை காண்பது விமர்சித்தார் .செந்தில் பாலாஜியை கொரோனாவை விட கொடிய வைரஸ் என்றும் அவர் எந்தஇலாகாவிலிருந்து ஊழல் செய்வதையே வேறையாக கொண்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார் .கரூரில் மக்கள் அவரை நிராகரித்து விடுவார்கள் என்ற பயத்தால் தான் அவர் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.. எந்தத் துறையில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதற்கு அவர் கைதறிந்தவர் என்றும் அவரை வைத்து முதலமைச்சர் சித்து விளையாட்டை செய்து வருவதாகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தம்பி என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via
Logo