திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ் காலமானார்.

by Admin / 21-11-2022 04:34:54pm
திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ் காலமானார்.

தமிழ்த்திரைவரலாற்றில் வசனங்கள் மூலம் புகழ்பெற்றவர்கள் இளங்கோவன்,கலைஞர்,ஆரூர்தாஸ்ஆவர் .தியாகராஜபாகவதர்,பி.யூ.சின்னப்பா படங்களில்  கதையின்  நகர்வே பாடல்களை வைத்து தான்   நகர்ந்து மூச்சு முன்னூறு  பாடல்கள் என்று பெருமையாகப்பேசிக்கொள்வார்கள்
 
.அந்த காலத்தில்   அதிகம்   விரும்பியது  பாடல்களை  அதனால் தான்  பாகவதர்  மன்மத லீலையை வெல்வாருன்டோ ,ஜய கிருஷ்னா முகுந்தா முர்ராரே  போன்ற  பாடல்களில் கிறங்கி கிடந்ததிராவிட  கருத்துக்கள்   மேலோங்கி  திரைப்படங்கள் வர ஆரம்பித்தன
.இளங்கோவனின் கருத்துச்செறிந்த வசனங்கள் ,கலைஞரின் பராசக்தியின்  பகுத்தறிவு  இயக்கத்தின் ஒட்டு  மொத்தபிரதிபலிப்பான  வசங்களால்  தமிழ்ப்படங்களில் குறிப்பாக எம்.ஜி.ஆர்.  சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்.படங்களில் இந்த தாக்கம் அதிகமிருந்தது
.அத்தகுச் சூழலில் தம் வசனத்தால் திரையுலகை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்.திருவாரூர் தங்கராசு ரத்த கண்ணீரில் வசன  புரட்சியை போலேவே  இவரும் ஆணித்தரமான வசனங்களை எழுதினார்
 
சிவாஜி ,ஜெமினி,சாவித்ரி  நடித்த பாசமலா் உள்பட.கிட்டதட்ட ஆயிரம் படங்களுக்கு  கதை,வசனம்  எழுதியவர்  இவராகத்தான் இருக்க முடியும் .நடிகர் கே.பாலாஜியின் விதி படத்தில்  நீண்டஇடைவேளைக்கு  பிறகு  இவர் எழுதி  நீதிமன்ற வசனம் அந்த  நேரத்தில்  ஒலிக்காத இடமே  கிடையாது  என்று  சொல்லலாம்
  வடிவேல்  நடித்த தெனாலி ராமன்வசனம் இவருடையதே..அத்தகைய  ஆளுமை தம் வயது முதிர்வின் காரணமாக  தி.நகர் இல்லத்தில் காலமானார். இவருக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ் காலமானார்.
 

Tags :

Share via