நெல்லை அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த கரடி

by Editor / 03-08-2021 10:31:08am
நெல்லை அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த கரடி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள பார்பரம்மாள் புரத்தில் ஊருக்கு அருகில் இருக்கும் வாழைத்தோப்பு பகுதியில் கரடி ஒன்று  நடமாடியதை நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ள வாழைத் ட்டத்தில் உள்ளவர்களுக்கு தகவல் சொல்லி உள்ளனர். தோட்டக்காரர்கள் வனத்துறைக்கு கரடி நடமாட்டம் உள்ள தகவலை தெரியப்படுத்தி உள்ளனர். வாழைத் தோப்புக்கு அருகில் நடமாடிய கரடி வேலியை தாண்டி சிலுவை அந்தோணி என்பவரின் வாழைத்தோப்புக்குள் சென்றதுதகவலறிந்து வந்த வனத்துறையினர் வருவாய் துறையினர் பார்பரம்மாள்புரம் ஊரிலுள்ள சிலுவை அந்தோணி என்பவரது தோட்டத்தில் முகாமிட்டுள்ளனர். வாழைத்தோப்புக்குள் பதுங்கியுள்ள கரடி வேறு எங்கும் தப்பித்துச் செல்ல முடியாத அளவிற்கு சுற்றிலும் வனத்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் தோட்டத்திற்குள் சென்று கரடியை பார்க்க முடியாதபடி எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்.

வாழைத் தோப்புக்குள் உள்ள கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதேபோல் மேலச்செவல் பகுதியிலும் குட்டியுடன் தாய் கரடி ஒன்று  நடமாடி வருவதால் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்காக சென்றுள்ளனர். அதன் பின்னர் பார்ப்பரம்மாள் புரத்திற்கு வனத்துறையினர் கூண்டுடன் வருகை தந்து கரடியை பிடிக்க உள்ளனர்.

 

Tags :

Share via