கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
மதுரை மாநகர் பகுதிகளில் கொலை வழக்குகளில் தொடர்புடைய வில்லாபுரம் டிஎன்எச்பி காலனியை சேர்ந்த கார்த்திஸ்வரன் என்ற பப்ளிமாஸ் கார்த்தி (வயது 26),பெத்தானியாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் (வயது 34),பெத்தானியாபுரம் அகஸ்தியர் 2 வது தெருவை சேர்ந்த சக்தி (வயது 27),பெருங்குடி எஸ்.என்.கல்லுரி சாலையை சேர்ந்த செல்வக்குமார் என்ற தியேட்டர் செல்வம் (வயது 25),வில்லாபுரம் டிஎன்எச்பி காலனியை சேர்ந்த அரிமணி (வயது 22),மேற்கண்ட 5 பேரும் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும், பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைக்கும் வகையில் நடந்து கொண்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்தார்.
Tags : கொலை வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது