சொகுசு கப்பலில் போதை விருந்து: தயாரிப்பாளர் வீடு, அலுவலகத்தில் சோதனை

by Editor / 09-10-2021 03:44:40pm
சொகுசு கப்பலில் போதை விருந்து:  தயாரிப்பாளர் வீடு, அலுவலகத்தில் சோதனை

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 1.33 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கைப்பற்றினர். இதில், சொகுசு கப்பலில் பயணித்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மாடல் அழகி முன்முன் டக்மிஷா உள்பட 18 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்ற வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பிரபல சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி நேரில் ஆஜராக போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. அவருக்கு பாலிவுட் நடிகர்கள் பலருடன் நேரடி தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதை பொருள் வினியோகித்த வழக்கிலும் கத்ரி மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories