கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது  நீயா .நானா.. போட்டியில் பாஜக-காங்.

by Editor / 13-05-2023 09:06:58am
கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது  நீயா .நானா.. போட்டியில் பாஜக-காங்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73 புள்ளி 19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியினர் தற்போதையை நிலவரப்படி 107 இடங்களிலும் பாஜக 94 இடங்களிலும் மஜக 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.தற்போதைய நிலவரப்படி நீயா ..நானா. என்ற நோக்கில் முன்னும்..பின்னும் இரண்டு கட்சிகளும் காலத்தில் உள்ளனர்.அதேசமயம் மஜக யின் உதவியை இரண்டு கட்சிகளும் நாடலாம் எனவும் 7 இடங்களில் முன்னிலையில் சுயே இருந்துவருகின்றன.


 

 

Tags :

Share via