அசாமில் நிலநடுக்கம்

அசாமின் துப்ரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். முன்னதாக, மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :